QSF34. நிலத்தடி நீரைப் பற்றி மனித சமூகம் அறியவில்லையா

 

இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்


ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்


QSF ஆய்வுக்குழு



தப்ஸீர் குறிப்பு:- 297. நிலத்தடி நீர் எங்கிருந்து வருகின்றது?

வ்வசனம் (23:18) நிலத்தடி நீர்பற்றி பேசுகிறது.

பூமியின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பது போல் பூமியின் கீழ்ப்பரப்பிலும் பெரிய ஆறுகளும், ஏராளமான தண்ணீரும் உள்ளன.

கடல் நீர், மணல் வழியாக கீழே இறங்கி அதுதான் நிலத்தடி நீராகச் சேமிக்கப்படுகிறது என்று மக்கள் நம்பி இருந்தார்கள். ஆனால் அது உண்மை அல்ல என்று இப்போது கண்டுபிடித்துள்ளனர்.

கடல் நீர், நிலத்தடி நீராகச் சேமிக்கப்படுகிறது என்றால் நிலத்தடி நீர் ஒருபோதும் குறையக் கூடாது. எப்போதும் கடலில் நீர் இருந்து கொண்டே இருப்பதால் எப்போதும் நிலத்தடி நீரும் குறையாமல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். எனவே கடல் நீருக்கும், நிலத்தடி நீருக்கும் சம்மந்தம் இல்லை என்று இப்போது கண்டுபிடித்துள்ளனர்.

ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை ஆங்காங்கே பூமியால் உறிஞ்சப்பட்டு பூமிக்கு அடியில் நிலத்தடி நீராகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று கிபி 1580ல் கண்டறிந்தனர். இதனால்தான் கடலுக்கு அருகில் உள்ள நிலத்தடி நீர் அனைத்தும் உப்பாக இருப்பதில்லை.

வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம் என்று பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் பேருண்மைகளை திருக்குர்ஆன் தெளிவுபடுத்தி விட்டது.

பெய்கின்ற மழை நீரை உறிஞ்சுவதற்கு ஏற்ப ஊர்களையும், நகரங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற மறைமுகமான வழிகாட்டுதலும் இந்த வசனத்திற்குள் அடங்கியிருக்கிறது.

இதை மனிதன் கண்டுபிடிப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் இதைத் தெளிவாகக் கூறி விட்டது. திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றுகளில் ஒன்றாக இவ்வசனமும் அமைந்துள்ளது.

நமது மறுப்பு:-

நிலத்தடி நீருக்கு மழைதான் முக்கிய காரணம். மழை இல்லாத வருடத்தில் நிலத்தடி நீர் இல்லாமல் போவதைப் பார்க்கிறோம்.

//எனவே கடல் நீருக்கும், நிலத்தடி நீருக்கும் சம்மந்தம் இல்லை என்று இப்போது கண்டுபிடித்துள்ளனர்./

//ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை ஆங்காங்கே பூமியால் உறிஞ்சப்பட்டு பூமிக்கு அடியில் நிலத்தடி நீராகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று கிபி 1580ல் கண்டறிந்தனர். //

குர்ஆன் வருவதற்கு முன்னே பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதன் வாழ்ந்து வருகிறான். அம்மனிதர்கள் வாழ்வதற்கு தேவையான ஞானத்தை அவ்வப்போது அல்லாஹ் வழங்கியே வந்துள்ளான். குர்ஆன் மட்டுமே ஞானத்தை போதிப்பதாக சொல்லவே கூடாது. முந்தய மக்களுக்கும் அல்லாஹ் பல தொழில்நுடபங்களை கற்றுக்கொடுத்திருந்தான் அவர்களுக்கும் ஞானம் வழங்கி இருந்தான்.

12000 வருடத்திற்கு முன்பே மனிதன் மழை நீரை நிலத்தடி நீராக சேமிக்ககக் கற்றுகொண்டான். பார்க்க https://en.wikipedia.org/wiki/Rainwater_harvesting#History_of_rain_water_harvesting

கடல் நீர்தான் குடிநீராக வருவதாக மனிதன் நினைத்திருந்தால் அவன் ஏன் மழை நீரை சேமித்தான். ஏன் சஹாபாக்கள் மழை வேண்டி பிரார்த்திக்க சொன்னார்கள். கடல் நீரே நிலத்தடி நீராக மாறி ஊற்றாக வந்திருக்க பிரார்த்திக்க சொல்லி இருக்கலாமே.